பேரறிவாளன் சாந்தன் முருகன் வழக்கு உண்மைகள்

பேரறிவாளன் சாந்தன் முருகன்  வழக்கு உண்மைகள் துக்ளக்

     

Posted in உலக தமிழ்ச் செம்மொழி மாநாட், கருணாநிதி, செம்மொழி, பேரறிவாளன் சாந்தன் முருகன், Uncategorized | Tagged | மறுமொழியவும்

பம்மல் முன்சிபல் திமுக கவுன்சிலர் தனி தொகைதண்ணீர் இணைப்பிற்கு    ரூ.60 ஆயிரம்

 

 

   

 

 

  

Posted in Uncategorized | மறுமொழியவும்

கே.என்.நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம் பரிகார பூஜை!

சங்கரநாராயண கோவிலில் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம் பரிகார பூஜை!

 
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் நேற்று திமுக முன்னாள் அமைச்சர்கள் சுமார் 5 மணி நேரம் சர்ப்ப விநாயகருக்கு பரிகார பூஜையும், சிவலிங்கத்திற்கு ருத்ர பூஜையும் செய்து வழிபட்டனர்.சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலுக்கு நேற்று காலை 10 மணி அளவில் திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் வந்தனர். சங்கரநாராயண சாமி சன்னதி கன்னி மூலையில் உள்ள சர்ப்ப விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், மற்றும் தீபாராதனை நடந்தது. அப்போது முன்னாள் அமைச்சர்கள் இருவரும் 51 விளக்குகள் ஏற்றினர். இந்த சிறப்பு பூஜை மதியம் 12 மணி வரை நடந்தது.பின்னர் 12 மணிக்கு மேல் ராகுகாலத்தில் சங்கரலிங்கசாமி சன்னதிக்கு வந்தனர். அங்கு லிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சங்கரநாராயண சாமி சன்னதியில் தரிசனம் செய்த முன்னாள் அமைச்சர்கள் கோமதி அம்பாள் சன்னதிக்கு வந்தனர். அங்கு அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.பின்னர் கோமதி அம்பாள் சன்னதி முன்னுள்ள ஸ்ரீசக்கரத்தில் உட்கார்ந்து பயபக்தியுடன் அம்பாளை வேண்டினார்கள். இங்கு பூஜைகள் செய்வதன் மூலம் வழக்கு, தண்டனை, சிறை போன்ற சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் ஆண்களுக்கு நிவாரணம் கிடைக்கும். அதேபோல் ராகு காலத்தில் சங்கரலிங்க சுவாமிக்கு ருத்ர பூஜை செய்வது மூலம் உக்கிரத்தில் இருக்கும் சிவபெருமானை குளிரவைத்து கஷ்டத்தில் இருந்து விடுபடலாம். மேலும் ஆடிதபசை முன்னிட்டு 11 நாட்கள் தபசு இருந்த அம்பாளை வேண்டினால் நினைத்தது நிறைவேறும்.கோமதி அம்பாள் சன்னதியில் உள்ள ஸ்ரீசக்கரத்தில் உட்கார்ந்து வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. நில மோசடி வழக்கில் முன் ஜாமீனில் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் நேரு, பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சங்கரநாராயண சாமி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Posted in Uncategorized | Tagged | மறுமொழியவும்

சமச்சீர் கல்வி -பேரறிஞரின் நடுநிலைக் கருத்து

சமச்சீர் கல்வி பற்றி சோ எழுதிய துக்ளக் கட்டுரை வாசகர் விருப்பம்…

இதற்கு, ஜனநாயகம் உகந்தது அல்ல!

எம்.எல்.ஏ. : (இரு மாணவர்களைப் பார்த்து) நாட்டிலே படிப்பு மேலே அக்கறை இல்லை. உங்களையே கேக்கறேன். ஒளுங்கா படிக்கிறீங்களாய்யா நீங்க? என்ன படிக்கிறோம்னு உங்களுக்கே தெரியலை. நீங்க என்ன படிக்கிறீங்கன்னு உங்களுக்கு தெரியுமாய்யா?

ஒரு மாணவன் : எப்படி ஸார் தெரியும்? நீங்கதான் எங்க பாடங்களை தினம் தினம் மாத்தறீங்களே! தினம் ஒரு எஜுகேஷனல் பாலிஸி! காலண்டர்லே தேதி கிழிக்கிற மாதிரி, கிழிச்சுத் தள்றீங்க! என்ன படிக்கிறோம்னு எங்களுக்கு எப்படித் தெரியும்? இன்னைக்கு படிக்கிறதுக்கு நாளைக்கு மதிப்பு கிடையாது! எதுக்கு ஸார் படிக்கணும்?

– இது 1961-ல் எழுதி, நடிக்கப்பட்ட ‘கோ வாடிஸ்?’ (எங்கே போகிறாய்?) என்ற எங்கள் நாடகத்தில் வருகிற வசனம்.

ஐம்பது ஆண்டுகள் கழிந்துள்ளன; ஆனால் மாணவர்களின் நிலை மாறவில்லை.

சென்ற ஆட்சியாளர்கள் சமச்சீர் கல்வி என்ற பெயரில், ஒரு ஸ்டண்ட் அடித்தாலும் அடித்தார்கள் – ஆட்சி மாறியும், அதன் பாதிப்பு அகலவில்லை; குழப்பம் தீரவில்லை. புதிய ஆட்சி, ‘சமச்சீர் கல்வி முறையில் மாற்றங்கள் தேவை’ என்று முடிவு எடுத்தது; இதற்கு உயர் நீதிமன்றத் தடை வந்தது; தமிழக அரசு அப்பீல் செய்தது; சுப்ரீம் கோர்ட், ‘ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி தேவை’ என்றும், ‘மற்றபடி இதை பரிசீலிக்க ஒரு கமிட்டி நியமிக்கப்பட வேண்டும்’ என்றும் உத்திரவிட்டது.

‘1-ஆம் வகுப்பில் சமச்சீர் முறையில் படித்துவிட்டு, பிறகு அது மாறினால், 2-ஆம் வகுப்பில் வேறு முறை; அதுபோல ஆறாம் வகுப்பில் சமச்சீர் முறை – அது மாறினால் 7-ஆம் வகுப்பில் வேறு முறை’ என்ற விளைவை ஏற்படுத்தக் கூடிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குழப்பத்தைத் தீர்க்கவில்லை; கூட்டியது. இத்துடன் உயர் நீதிமன்ற விசாரணைக்கு, விஷயத்தை அனுப்பி வைத்தது சுப்ரீம் கோர்ட்.

இப்போது சென்னை உயர் நீதிமன்றம், எல்லா வகுப்புகளுக்குமே சமச்சீர் கல்வி கற்பதற்கான புத்தகங்கள் ஜூலை 22-ஆம் தேதிக்குள் கொடுக்கப்பட வேண்டும் – என்று தீர்ப்பளித்து விட்டது.

தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டிற்குச் சென்றது. ‘ஹைகோர்ட் உத்திரவிற்குத் தடை கிடையாது; ஆனால் தமிழக அரசின் அப்பீல் பரிசீலிக்கப்படும்; அதே சமயத்தில் சென்னை ஹைகோர்ட் கூறியபடி, சமச்சீர் கல்விப் புத்தகங்கள் கொடுக்கப்படுவதற்கு ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை அவகாசம்’ என்று உத்திரவிட்டிருக்கிறது.

ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு செய்துள்ள அப்பீல் முடிவாகவில்லை; அப்பீல் தமிழக அரசுக்குச் சாதகமாக முடிந்தால், சமச்சீர் புத்தகங்கள் தேவைப்படாது; ஆனால் சுப்ரீம் கோர்ட் ‘ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்குள் சமச்சீர் புத்தகங்கள் வினியோகிக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளது; அப்பீலில் இறுதி தீர்ப்பு வருவதற்குள், தமிழக அரசின் நிலைக்கு எதிராக அமைகிற இந்த உத்திரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது என்பது புரியவில்லை.

இதற்கிடையில் மாணவர்களின் கல்வி ஆண்டில், இரண்டு மாதங்கள் கோவிந்தா! என்ன படிக்கப் போகிறோம் என்பது அவர்களுக்கு இன்னமும் தெரியாது. சென்ற அரசின் சமச்சீர், சமத்தாழ்வுதான்; அதை நீதிமன்றம் ஏற்றது சரியல்ல; கொள்கை முடிவில் நீதிமன்றம் குறுக்கிட்டதாகத்தான் இது காட்சியளித்தது. ஆனால், சரியோ தவறோ, நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்தபோது – நிச்சயமற்ற தன்மை தொடர்வதால், மாணவர்களுக்கு ஏற்படுகிற பிரச்சனையை மனதில் கொண்டு – புதிய அரசு, இந்த ஆண்டு அதையே அமல்செய்து, அடுத்த ஆண்டுக்கு மாற்றங்களுடன் கூடிய புதிய முறையை வகுத்திருக்கலாம். அப்படிச் செய்யாமல், ‘அப்பீல்கள் செய்து, தமிழக அரசு மாணவர்களின் குழப்பத்தை நீட்டித்தது; இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்’ – என்ற விமர்சனத்தில் நியாயம் இருக்கிறது. இனி சுப்ரீம் கோர்ட் இறுதியாகத் தன் தீர்ப்பைக் கூறிய பிறகு (ஜூலை 26-ஆம் தேதி), மாணவர்களுக்கு ஒரு தெளிவு ஏற்பட்டால்தான் உண்டு.

இவை ஒருபுறம் இருக்க, இந்த சமச்சீர் விவகாரம், வெறும் வாய்ச் சவடால் சீர்திருத்தம் என்பது, அந்த சமச்சீருக்கு வக்காலத்து வாங்குபவர்கள் கூறுகிற கருத்துக்களிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.

சமச்சீர் வக்காலத்துக்கள் என்ன சொல்கின்றன? ‘வசதி உள்ளவர்கள் மட்டும், நல்ல தரமுள்ள கல்வியைப் பெறுவது; மற்றவர்கள் சாதாரண கல்வியைப் பெறுவது – என்கிற நிலை அநீதி அல்லவா?’

அதாவது, ‘சில வழிமுறைகளில் (மெட்ரிகுலேஷன் போன்ற) தரமான கல்வி புகட்டப்படுகிறது’ என்பதை இவர்கள் ஏற்கிறார்கள். இப்படி வசதியுள்ளவர்கள் பெறுகிற கல்விக்கு நிகராக, வசதி அற்றவர்களுக்குக் கிட்டும் கல்வியையும் உயர்த்த வேண்டியதுதானே? அது முடியவில்லை. அதற்கு வக்கில்லை. ஆகையால், உயர்ந்தவற்றையும் தாழ்த்தி, சமச்சீர் கல்வி தருவதுதான் நியாயம் – என்பது இவர்கள் வாதம்.

‘சிலர் விமானத்தில் போகிறார்கள்; சிலர் கார்களில் போகிறார்கள்; சிலர் மோட்டார் சைக்கிளில் செல்கிறார்கள்; ஆனால், பலர் நடந்து போகிறார்களே! ஐயோ, இந்த அநீதி தொடரலாமா? இனி ‘கால் நடை’தான் எல்லோருக்கும் சமச்சீர் போக்குவரத்து’ என்று சொல்வதா நியாயம்?

இந்த சமச்சீர் வக்காலத்துகளுக்கு, வசதியிருப்பவர்களைப் பார்த்தால் துக்கம் பொங்கிக் கொண்டு வருகிறது. அந்தத் துக்கம் கல்வியுடன் மட்டும் நிற்பது என்ன நியாயம்? வசதியுள்ளவர்களின் பிள்ளைகள், நல்ல ஹோட்டல்களில் சாப்பிடுகிறபோது, வசதி அற்றவர்களின் பிள்ளைகள் டீக்கடைகளில் ‘ஸிங்கிள் டீ, டபுள் பொரை’ சாப்பிடுவது என்ன நியாயம்? எல்லோருக்கும் வசதியான ஹோட்டல் சாப்பாடு தர முடியாது; ஆனால் சம நிலை வேண்டும்; ஆகையால் இனி எல்லோரும் ‘ஸிங்கிள் டீ, டபுள் பொரைதான்’! சமச்சீர் சிற்றுண்டி!

இந்தப் பித்துக்குளித்தனத்திற்கு ஒரு எல்லை உண்டா என்ன? சமச்சீர் கல்வி மட்டும்தான் இன்றைய அவசியத் தேவையா? சமச்சீர் சாப்பாடு – சமச்சீர் போக்குவரத்து… என்று கொண்டு வந்து, சமச்சீர் என்ற பெயரில் எதிலும் தரமே கூடாது என்று செய்து விட்டால், அதன் பின்னர் உயர்வு ஏது? தாழ்வு ஏது?

இந்த சமச்சீர் சன்மார்க்கவாதிகளின் பார்வை, இப்போது அரசு அதிகாரிகளின் பக்கம் திரும்பி இருக்கிறது. ‘அதிகாரிகள், தங்கள் வீட்டுச் சிறுவர் சிறுமிகளை, அரசுப் பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும். அவர்களே இதைச் செய்யவில்லை என்றால், அப்புறம் அரசுப் பள்ளிகளுக்கு என்ன மரியாதை?’ என்று ஒரு வாதம் புறப்பட்டிருக்கிறது. இத்துடன் விடுவானேன்? ‘அரசு அதிகாரிகள் காரிலோ, வேறு எந்த வாகனத்திலோ போகக்கூடாது; அவர்கள் அரசு பஸ்ஸில்தான் – மன்னிக்கவும் – அரசுப் பேருந்தில்தான் செல்ல வேண்டும்; இல்லாவிட்டால், அரசுப் பேருந்துகளை யார் மதிப்பார்கள்?’ என்று வாதம் புரிந்து, அரசு அதிகாரிகளை ஒரு அமுக்கு அமுக்க வேண்டியதுதானே!

அதே மாதிரி, அந்த அதிகாரிகள் தங்கள் வீடுகளில் அல்லது ஃப்ளாட்களில் குடியிருக்கும் அக்கிரமத்தை நிறுத்த வேண்டும். பல பிள்ளைகள் குடிசைகளில் வாழ்கிறபோது, இந்த அரசு அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு வீடும், ஃப்ளாட்டும் வேண்டிக் கிடக்கிறதா? அட்டூழியம். குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில்தான் அவர்கள் இனி குடியிருக்க வேண்டும். அப்போதுதான் சமச்சீர் குடியிருப்பு உருவாகி, சமநீதி வேரூன்றி, சமத்தாழ்வு முழுமை அடையும்.

அதாவது, சமத்துவம்தான் நமது லட்சியம் என்றால், அதைக் கல்வியோடு நிறுத்துவானேன்? எங்கும் சமத்துவம், எதிலும் சமத்துவம் வேண்டாமா? உணவு, இருப்பிடம் போன்றவையும் தேவைகள் அல்லவா? அதில் எல்லாம் சமத்தாழ்வு வேண்டாமா? இதுதான் லட்சியம் என்றால் – பேசாமல், கம்யூனிஸப் பிரேதத்தை, அதன் சமாதியிலிருந்து தோண்டி எடுத்து, அந்தப் பிரேதத்திற்கு சமநீதி இயந்திரத்தைப் பொருத்தி, அதை இயக்கி, முழு சமத்தாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்!

இந்த சமச்சீர் பேர்வழிகள், சென்ற அரசு, சமச்சீரினால் கல்வியைத் தாக்கியபோது, அதை ஆர்ப்பாட்டமாக வரவேற்றார்கள். தரம் தாழ்வது பற்றி அப்போது இவர்கள் பேசவில்லை. சரி. இப்போது, ‘சமச்சீர்தான் உயர்வு’ என்கிறார்கள். ஒரே பாடத் திட்டம் வந்தால், அது உயர்வாகி விடுமா?

தரமுள்ள கல்வி தரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முயற்சியில் நம்பிக்கை; பல வகைப்பட்ட திறன்களுக்கு ஊக்கம்; பொதுஅறிவு; நல்ல நடத்தை; ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிற திறமை; தன்னுடைய எண்ணத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிற திறன்; தன்னம்பிக்கை… போன்ற பல நன்மைகள் கிட்டுகின்றன.

அதனால்தான், நல்ல பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், தைரியமாகப் பேசுகின்றன; நன்றாக நடந்து கொள்கின்றன; நம்பிக்கையுடன் உலவுகின்றன. இந்த மாதிரி கல்வி தரக் கூடிய தன்னம்பிக்கை, ஆங்கில அறிவு, தைரியம் போன்றவற்றுக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் உதாரணமாகத் திகழ்கின்றனர்; இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கூட அவர்களில் ஒருவர். அதனால்தான், இம்மாதிரி கல்வியை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக, சமத்தாழ்வு கல்வியை மாற்றுவதற்கான நடவடிக்கையை அவர் எடுத்தாரோ, என்னவோ!

இந்த மாதிரி கல்வியைப் புகட்டும் பள்ளிகளில் ஒரு தனி கலாசாரம் நிலவுகிறது; அது ஜாதிக் கலாசாரம் அல்ல; பணக் கலாசாரம் அல்ல; அது முனைப்பு கலாசாரம்; தன்னம்பிக்கையை தருகிற கலாசாரம். பாடத் திட்டங்களினால் மட்டும் அதை சாதிக்க முடியாது. நல்ல ஆசிரியர்கள் தேவை; நல்ல நோக்கம் தேவை. இன்றைய அரசுப் பள்ளிகளில் இவை இருக்கின்றன என்று கூறுவது அபத்தம் கூட அல்ல – அநியாயம்.

‘சரி, இதெல்லாம் வேண்டாம்; நம்மால் ஆகாது; ஆகையால், சமத்தாழ்வுதான் ஒரே வழி’ என்று தீர்மானித்த பிறகு – அதை ஏன் பள்ளிகளோடு நிறுத்த வேண்டும்? அது என்ன நியாயம்? கல்லூரியில் சமத்தாழ்வு வேண்டாமா? உதாரணத்திற்கு, சிலர் மட்டுமே – மருத்துவப் படிப்பு பெற முடிகிறது. அதாவது வசதி படைத்த வர்க்கத்தினர் மட்டுமே மருத்துவப் படிப்பு பெற முடிகிறது. அநியாயம் இல்லையா இது?

எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும், அலோபதி மருத்துவ முறையை போதிக்க முடியாது. ஆகையால், சித்த வைத்தியம்தான் இனி மருத்துவக் கல்லூரிகளில் போதிக்கப்படும் என்று சட்டம் இயற்றினால் – அடடா! நினைத்தாலே மெய்சிலிர்க்கிறது! சமச்சீர் மருத்துவம் வந்து விடுமே! சிலர் மட்டும், உயர்ந்த பயிற்சி பெறுகிற அவலநிலை மாறி எல்லோருக்கும் லேகியம், சூரணம் பற்றிய பயிற்சி! ஆஹா!

இந்த சமச்சீர் அபத்தத்தை ஆரவாரத்துடன் வரவேற்பவர்கள் யார் என்று பார்த்தாலே, இது வெறும் உடான்ஸ் என்பது புரியும். தங்கள் வீட்டுக் குழந்தைகளை, மிக நல்ல தனியார் பள்ளிகளிலும், அயல்நாடுகளிலும் கூட படிக்க வைக்கிற தலைவர்கள்; வசதிக் குறைவு இல்லாத அறிவாளிகள்… போன்றவர்கள்தான் இந்தச் சமச்சீர் வக்காலத்து ஆசாமிகள்… அதாவது, வசதியானவர்களால் வசதியானவர்களுக்காக நடத்தப்படுகிற, வசதியானவர்களின் பொழுதுபோக்குகளில் இதுவும் ஒன்று. இந்த மேடை முழக்கத்தினால் அவர்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. இவர்களுடைய சமச்சீர் புரூடா, சமூகத்தைப் பின்னுக்குத் தள்ளும். அதனால் அவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. அவர்களுடைய வீட்டுப் பிள்ளைகள், சென்ட்ரல் போர்ட் முறையில் படிப்பார்கள். சமச்சீர் சாமியாட்டம் அவர்களைப் பாதிக்கப் போவதில்லை.

ஆகையால், இந்த சமத்தாழ்வை வரவேற்கிற அப்பாவிகள் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். தங்கள் மகன் அல்லது மகள் என்ன கல்வி பெறுவது என்பது, பெற்றவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது அல்ல என்றால் – அதற்கு ஜனநாயக ஆட்சி முறை உகந்தது அல்ல. பேசாமல், சர்வாதிகாரத்தைக் கொண்டு வந்துவிட வேண்டியது தான்.

இப்போது, சமச்சீர் குடாக்குத்தனம், சமூகத்தைப் பீடித்திருப்பதால் என்ன நடக்கும்? இந்த சமச்சீர் தாக்குதலினால் பாதிக்கப்படாதவர்கள் பலர் உண்டு; அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வீட்டுப் பிள்ளைகளை, மத்திய கல்வி முறைக்கு (சென்ட்ரல் போர்ட்) மாற்றி விடுவார்கள். இந்தச் சமச்சீர் பித்துக்குளித்தனம், தன்னுள்ளே அடக்கியுள்ள நன்மை இது ஒன்றுதான்!

சரி, தமிழகத்தின் கதி? அதற்கென்ன? இனி ஒரு விதி செய்வோம்; அதை எந்நாளும் காப்போம் – கல்வியின் தரத்தினை அழித்திடுவோம்!.
நன்றி: துக்ளக்

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , , | மறுமொழியவும்

திருச்சி : 50 குழந்தை சிசுக்கள் குப்பையில் கொட்டி கிடக்கும் காட்சி. – படங்கள்


திருச்சி மதுரை நான்கு வழிச்சாலை அருகே உள்ள பஞ்சப்பூர் என்ற இடத்தில் 50க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் டப்பாவில் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து மாதங்கள் கொண்ட சிசுக்கள் கிடந்துள்ளன.

இவற்றை அந்த பகுதியில் உள்ள மக்கள் பார்த்துள்ளனர். அதிக வாடை வந்ததால், பொதுமக்கள் என்னவென்று ஆராயும் போது இந்த அதிர்ச்சியான விஷயம் தெரியவந்துள்ளது.


இதையடுத்து எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து, 50க்கும் மேற்பட்ட சிசுக்கள் கொண்ட டப்பாக்களை குழி தோண்டி புதைத்துள்ளர்.

பின்னர் இந்த தகவல் திருச்சி மாவட்ட எஸ்.பி., லலிதா மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் கவனத்துக்கு சென்றது.


இதையடுத்து சிசுக்கள் உள்ள டப்பாக்கள் எப்படி வந்தது என்று விசாரணைக்கு உத்தரவிட்டனர். எடமலைப்பட்டி புதூர் காவல்நிலைய எஸ்.ஐ. மும்தாஜ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

திருச்சி தில்லைநகரில் உள்ள சுந்தரேசன் என்ற டாக்டரிடம் லேப் அசிஸ்டெண்ட்டாக பணிபுரியும் விஜயராகவன் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

திருச்சி சென்னை பைபாஸ் ரோட்டில் உள்ள மருத்துவ கல்லூரி லேப்பில் உள்ள சிசுக்கள் உள்ள டப்பாவை, மருத்துவ கல்லூரி நிர்வாகம் அழிக்க சொன்னது. போலீஸ் அனுமதியுடன் இதனை செய்திருக்க வேண்டும். ஆனால் போலீஸ் அனுமதியில்லாமல் செய்துவிட்டதாக விஜய ராகவன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்
http://vaiarulmozhi.blogspot.com/2011/07/50_25.html
Posted in Uncategorized | மறுமொழியவும்

தமிழன் எனும் ஆரியன்

அரவிந்தன் நீலகண்டன்

தமிழருக்கும் வேதங்களுக்கும் தொடர்பில்லை என்றும் தமிழர் வேதங்கள் வேறு என்றும் கூறப்படும் கோட்பாடுகளுக்கு எவ்வித அடிப்ப்டையும் இல்லை. இவை எல்லாம் ஆரிய படையெடுப்பு அல்லது ஆரிய திராவிட இனவாத அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆதாரமற்ற கட்டுமானங்கள் மட்டுமே. வேதங்களில் வரும் ஒரு பதமான ஆரிய என்பது எப்படி தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் நாம் காணலாம்.

திருமூலர் தமது திருமந்திரத்தில் ஆரிய எனும் பதத்தினை இறைவனையும் குருவையும் குறிக்க பல இடங்களில் பயன்படுத்துகிறார்: உதாரணமாக:

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தஞ் சூழ்பஞ்சை சுட்டிடா
சூரிய சந்நிதி யிற்சுடு மாறுபோல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே (திருமந்திரம் 1.118)

மாணிக்கவாசக சுவாமிகளின் திருவாசகம் சிவபுராணத்தில் சிவபெருமானை “பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே” என பாடுகிறார். திருப்பாண் ஆழ்வார் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர் ஆவார்.  ‘குலங்களாய ஈர் இரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்’ என அவர் தம்மையே தாழ்த்தி கூறுகிறார். ஆனால் அந்தணரான வேதாந்த தேசிகர், திருப்பாண் ஆழ்வாரை பின்வருமாறு வணங்கி துதிக்கிறார்:

“பாண்பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பழமறையின் பொருள் என்று பரவுகின்றோம்
வேண் பெரிய விரிதிரைநீர் வையத்து உள்ளே
வேதாந்த ஆரியன் என்று இயம்ப நின்றோம்.”

ஆக, தாழ்த்தப்பட்ட குலத்தவரை வேதாந்த ஆரியன் என்றே அழைக்கிறார் வேதாந்த தேசிகர். அருட் பெருஞ் ஜோதி வடலூர் வள்ளலார் சுவாமிகளும் ஆரிய எனும் பதத்தினை தமது திருவருட்பா பாடலில் பயன்படுத்தியுள்ளார்.

ஆரிய லகம்புற மகப்புறம் புறம்புறம்
ஆரமு தெனக்கரு ளருட்பெருன் ஜோதி
சூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென்
றாரியர் புகழ்தரு அருட் பெருஞ் ஜோதி (திருவருட்பா 281-284)

இவ்வாறு  ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தமிழ்நாட்டின் ஆன்மிகப்பேராளர்களால் ஆரிய எனும் பதம் எவ்வித இனத்தொடர்பும் இல்லாமல் ஆன்மீக அருள் பெற்ற ஞானிகளையும் இறைவனையும் குறிக்கவே பயன்படுத்தப்பட்டதென காண்கிறோம். வேடுவர் குலத்துதித்த வான்மீகி மகரிஷி ‘அனைவரிடமும் அன்பு கொண்டு அனைவராலும் விரும்பப்படுபவனே ஆரியன்’ என கூறியுள்ளார் (பாலகாண்டம் 1/16). பகவான் புத்தர் தர்மபாதாவில் ‘உயிர்களுக்கு துன்பம் ஏற்படுத்தாதவனே ஆரியன் (தம்மபாதா 270) கூறியுள்ளார். இவை எல்லாம் 19 ஆம் நூற்றாண்டில் ஆரிய இனவாதம் புகுத்தப்படும் காலம் வரை ஆரிய எனும் பதம் பாரதம் முழுவதும் இனரீதியாக பயன்படுத்தப்படவில்லை என்பதற்கு சான்றாகும்.

ஆரிய படையெடுப்புக்கோட்பாட்டின் சின்ன சின்ன விஷயங்கள் கூட அகழ்வாராய்ச்சியில் அடிபட்டுப் போயிருக்கின்றன. உதாரணமாக, வேதங்களில் பார்லி குறித்து உள்ளது அரிசி குறித்து இல்லை. ஆனால் ஹரப்பா பண்பாட்டில் நெல் வயல்கள் உள்ளன. எனவே இரண்டும் வெவ்வேரு பண்பாடுகள் என கூறப்பட்டது. ஆனால் அண்மைக் காலத்தில் பலுசிஸ்தானின் மெஹர்கர்ஹ் (Mehrgarh) எனும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி பல குறிப்பிடத்தக்க பார்வை மாற்றங்களை அகழ்வாராய்ச்சியாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பண்பாட்டின் காலமானது கிமு 6500 என கணிக்கப்படுகிறது. பொதுவாக வரலாற்றாசிரியர்கள் புதிய கற்கால காலகட்டத்திற்கு பின்னரே பெரிய நகர நாகரிகங்கள் உருவானதாகக் கணிக்கின்றனர்.ஆனால் மெஹர்கர்ஹ் ஏறத்தாழ 500 ஏக்கர்கள் பரப்பளவில் மக்கள் வாழ்ந்ததைக் காட்டுகிறது. பண்டைய காலத்தில் மிகப்பெரிய மக்கள் கூட்டமாக பண்பாட்டுடன் வாழ்ந்த அரிதான இடங்களில் இதுவும் ஒன்று என இப்போது இவ்விடம் கணிக்கப்படுகிறது.

மேலும் இது சிறந்த கிராமப்புற நாகரிகமாக இருந்ததுடன் பிற்கால ஹரப்பா நகர நாகரிகத்துடன் தொடர்புடையதாக அமைகிறது. இவர்கள் அரிசியை அறிந்திருக்கவில்லை. இவர்கள் பார்லி பயிரிட்டனர். இந்த நாகரிகத்தின் பல அம்சங்கள் வேத இலக்கியத்துடன் ஒத்துப் போகின்றன. இந்நாகரிகத்தின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமே ஹரப்பா நாகரிகம் ஆகும். இந்நாகரிகத்தில் பிற்கால ஹரப்பா பண்பாட்டினையொத்த பெண் தெய்வ வழிபாடு இருந்ததுடன், பசுவும் புனிதமானதாகக் கருதப்பட்டதற்கான தடயங்களும் கிடைத்துள்ளன. ஆக, கிமு 6000 முதலே தொடர்ச்சியுடைய ஒரு பண்பாட்டின் சந்ததிகளாக நாம் இருந்து வருகிறோம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அகழ்வாராய்ச்சியாளர் பி.பி.லால் கூறுகிறார்:

“மெஹர்கர்ஹ் அகழ்வாராய்ச்சி எதைக் காட்டுகிறது என்றால் இந்தியப் பிரதேசத்தின் வட மேற்கு பகுதியில் விவசாய வாழ்க்கை கொண்ட புதிய கற்கால சமுதாயம் ஏறக்குறைய கிமு ஏழாயிரம் ஆண்டுகளிலேயே நிலையாக உருவாகிவிட்டது என்பதைத்தான். (பொதுவாக விவசாய குடியிருப்புக்கள் முதலில் உருவான பிரதேசமாகக் கருதப்படும்) மேற்காசியாவின் விவசாய குடியிருப்புகளிலிருந்து இவை பெருமளவு மாறுபடுகின்றன. ஆடுகளையும் கோதுமை பயிடுதலையும் முக்கியமாக கொண்ட குடியிருப்புக்கள் மேற்காசிய பிராந்தியத்தைச் சார்ந்தவை. மெஹர்கர்ஹ் பிரதேசத்திலோ பார்லியும் மாடுகளும் பிரதானமாக விளங்குகின்றன. ஆக, மேற்காசிய (விவசாயக் குடியிருப்புகளின்) உதயத்துடன் தொடர்பற்றது இந்த பண்பாடு. மட்டுமல்ல. இந்த மண்ணிற்கே உரிய மானுட பரிணாம உதயமாக மட்டுமே நாம் இதை காண முடியும். மேலும் இப்பண்பாட்டுக்கூறுகள் பின்னால் உருவான உலோகப்பயன்பாட்டு கலாச்சாரமாக வளருவதையும் – கிமு மூவாயிரம் ஆண்டுகளில் தெளிவாக ஹரப்பா நாகரிகமாக பரிணமிக்கும் சமுதாயத்தின் பல பரிணாம நிலைகளையும் இதனில் நாம் காண முடிகிறது. மேலும் இங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்புகளை விரிவாக ஆராய்ந்த ஹெம்பிஸ் மற்றும் அவரது துணை ஆய்வாளர்கள் கிமு 4500-கிமு 800 வரைக்குமான காலகட்டத்தில் உயிரியல் குழுமத்தொடர்ச்சியும் இதில் இருந்திருப்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.”

ஒரு வரியில் சொன்னால், ஆரிய இனவாதத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

Posted in Uncategorized | 1 மறுமொழி

பத்திரிக்கையாளர்களை உயிரோடு எரித்த வழக்கு- மீண்டும் சிபிஐ

Posted in உலக தமிழ்ச் செம்மொழி மாநாட், எந்திரன், கருணாநிதி, செம்மொழி, சோனியா, ஜெயலலிதா, தி.மு.க. ஊழல், மு.க.ஸ்டாலின் | மறுமொழியவும்